அனுமதிப்பாயா?....
உன் உதடுகளில் உலா வர
அனுமதித்த என்னை
உன் உள்ளத்தில் உலா வர
அனுமதிப்பாயா.
என் உயிரே?......
கேள்விக் குறியாய்
வெங்கடேசன் பழநி
Monday, September 22, 2008
முரண்களின் முத்தங்கள்
சாதிகள் இல்லையடி பாப்பா - பாரதி சொன்னாராம்..
சாதிச் சான்றிதழ் (கண்டிப்பா) வேண்டுமடி பாப்பா(ஆசிரியர் சொன்னார்)
எல்லா மதமும் அன்பை போதிக்குதுன்னு சொன்னாங்க பாப்பா
ஆனால் இங்க எல்லொரும் அன்பை விட்டுட்டு வெறும் மதத்தை மட்டும் போதிக்குறாங்களே பாப்பா
எல்லா கட்சியும்(மனிதர்களும்) பெண்ணுரிமையப் பத்தி வாய் கிழிய பேசுவாங்க பாப்பா..
ஆனா இங்க 33%க்கே முக்க வேண்டி இருக்கே பாப்பா (நாட்டிலையும் சரி வீட்டிலையும் சரி இங்க ரெண்டும் ஒன்னு தான் பாப்பா) .
நல்ல அரசியல் வேண்டும்னு சொல்லுவாங்க பாப்பா
ஆனா இவங்க மட்டும் அரசியலுக்கு வரவே மாட்டங்க பாப்பா..
(நடுத் தர வர்க்கம் - இலவசம்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள அந்த கட்சியை செயிக்க வச்சிரும்)
விவசாயக் கடன் தள்ளுபடி ஆச்சு பாப்பா பட்செட்டுலகூடவ சேந்து இலவசமா விவசாயியும் தள்ளுபடி ஆகுதே பாப்பா நெசத்துல
கல்-வின்றது உள்ளிருப்பதை வெளிக் கொண்ர்தலாம் பாப்பா.பைத்தியக்காரனுங்க ..
நாம வெளியிப்பதை உள்ள தள்ளுறது தான் சரி பாப்பா.
அம்மா .. அப்பா.. கண்டிப்பா வேணும் பாப்பா...
அப்ப தான கருணை இல்லம் , முதியோர் இல்லம் எல்லாம் சிறப்பா செயல் படும்..
இவங்க இல்லைன்னா இது எல்லாம் முடங்கிடாது..
என்ன பாப்பா சரி தான..
தேசிய நதி நீர் இணைப்ப பத்தி நல்லா பேசுனோம் பாப்பா..
என் பாப்பா நேத்து நீ பக்கத்து வீட்டுக்காரனுக்கு தண்ணி குடுக்கலை தான..
நீ செய்தது ரொம்ப சரி தான் பாப்பா..
கடைசியா ஒன்னே ஒன்னு பாப்பா
வேற்றுமையில் ஒற்றுமைன்னு இந்தியாவ பத்தி எங்கயோ கேட்டே பாப்பா
இப்ப தான் இந்த நாயிக்கு புரியுது .. இந்தியா வேற்றுமையில் மட்டும் தான் (கண்டிப்பா) ஒற்றுமைன்னு பாப்பா..
முரணாய் ஆயிட்டேனே பாப்பாஇந்த வெங்கடேசன் பழநி....

Saturday, September 20, 2008
என் அம்மா
என்னுயிர் தான் வெளி வரவே
உன்னுயிர் நோக துடித்தவள் நீ...(இன்னுயிரை துறந்தவர் பலர்)
உன்னுதிரம் தான் திரித்து
எனக்கமுது அளித்தவள் நீ....
உனக்கான உன் உணர்வை
எனக்காக அழித்தவள் நீ.....
எனக்கொன்று என்றாலும்
அதுதனக்கென்று துடித்தவள் நீ...
என் வாழ்வை நான் வாழ
ஊணுறக்கம் பாராமல் உன் வாழ்வைது(ம)றந்தவள் நீ...
விதை எனவே இருந்த என்னைவிருச்சமாக்கி விட்டவள் நீ...
உன் கரம் தான் எப்பொழுதும்
அது எனைக் காக்க காத்திருக்கும்...
உன் முகம் தான் எப்பொழுதும்
அது என் அகம் தான் காட்டிடுமே...
உன் மகிழ்ச்சி எப்பொழுதும்
அது என் மகிழ்ச்சி ஒன்று தானே....
அம்மா என்ற ஒற்றைச் சொல்லே
உனக்கெல்லாமுமாய் ஆனதுவே.....
ப.லட்சுமியின் மகனான வெங்கடேசன் .
என் அம்மாவிற்க்கு ஒரு சிறு காணிக்கையாக இந்த கவிதையை சமர்ப்பிக்கின்றேன்

கவிதை
தமிழ்
தமிழ் பேசு தங்க காசு
எங்கோ கேட்டேன்
தாய்ப் பால் கொடு தங்க காசு
எங்கோ கேட்பேன்
தாய்ப் பால் குடித்தால் செழுமை பெறும் உங்கள் குழந்தை
தாய் மொழிப் பால் குடித்தால்செழுமை பெறும் உங்கள் எண்ணக் குழந்தை இன்னும் போகவில்லை
எங்களுக்கு அந்த அடிமைப் புத்தி
அன்று ஆங்கிலேயனுக்கு
இன்று ஆங்கிலத்திற்க்கு
ஆங்கிலத்தைக் கொல்ல மாட்டோம்
ஏனென்றால் எங்களுக்கு அது சோறு போடுகின்றது
தாயில்லாமல் தனியே நிற்க்கும் ஆதரவற்ற குழந்தைப் போல
தனியே தவிப்பது தாய் மொழி தமிழ் தானே
அதனால் கொல்லுகின்றோம் தமிழை ஆங்கிலம் எனும் நஞ்சு கலந்து
தவறில்லை ஆங்கிலம் பேசுவது
அதே போலத் தான் தவறேதுமில்லை
பிற மொழிக் கலப்பின்றி தமிழ் பேசுவதும்
என்னுடைய முயற்சியை தொடங்கிவிட்டேன்
நீங்கள் எப்போது ?
தோழமையுடன்
ப.ல.வெங்கடேசன்

Subscribe to:
Posts (Atom)